Featured

Sri Lankan Tamil Song of 70s - 80s - Nee Indri Nilavu

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by
416 Views
70- 80களில் எம்மவர் மெல்லிசைப் பாடல்கள் - நீ இன்றி நிலவு ஏன் வந்ததிங்கு


திருத்திய தகவல்களுடன் மீள் தரவேற்றம் செய்யப்படுகிறது

தகவல்களை தந்துதவிய அண்ணன் திரு எம்.பி. பரமேஷ் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்

நீ இன்றி நிலவு ஏன் வந்ததிங்கு
நான் கொண்ட மாற்றம் தான் சொல்ல என்று

எம்மவர் ‘மெல்லிசை மன்னர’ பரமேஷ் அவர்களின் கன்னி இசைத்தட்டு முயற்சியைப் பற்றி புதிதாக நாம் சொல்ல ஒன்றுமில்லை. இப்போதுபோல் கணணியை வைத்துக்கொண்டு எல்லோரும் இறுவட்டுகள் வெளியிடும் இலகுவான காலகட்டமாய் 70களை எண்ணமுடியாது. (இப்போது இம்முயற்சிகளை செய்பவர்களை குறைகாண்பது எம் எண்ணமல்ல). அதுவும் தலைநகர் கொழும்பில் இருந்து வெகுதொலைவில் தள்ளிப்போய் திருமலையில்
இந்த இசைமுயற்சி எவ்வளவு சிரமமான காரியமாய் இருந்திருக்கும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கவாய்ப்பில்லை. இசைக்கருவிகளை ஒரு கணணிவிசைப்பலகைக்குள் அடைத்து குரல்வளையை திருகும் முயற்சியாயில்லாமல், இருபது மேற்பட்ட இசைக்கருவிகளுடன் உயிருள்ள பாடல்களை அன்று தந்த அன்றைய இளையவர்கள் பரமேஷ் போன்றவர்களின் முயற்சிகள் போற்றப்படவேண்டியவை இல்லையா?

பாடல் - நீ இன்றி நிலவு ஏன் வந்ததிங்கு

பாடியவர்கள் - கே ஆர் கமலா & எம். பி. பரமேஷ்

கவிவடிவம் - பரமேஷ்

இசை - பரமேஷ்

Song - Nee Indri Nilavu

Sung by - K R Kamala & M P Paramesh

Lyrics- M P Paramesh

Music – Paramesh

Paramesh Konesh Production – Orginal Sound Track
Category
Music from 70's
Commenting disabled.